சவுதி அரேபியா கொடுத்து வந்த கடன் நெருக்கடியில் இருந்து பாகிஸ்தானை காப்பாற்றி இருக்கிறது சீனா.
இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு இரண்டு முறை சவுதி அரேபியாவுக்கு சென்றவர், அந்நாட்டு தலைவர்களிடம் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி, பாகிஸ்தானுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 6.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதிப் பொதியை வழங்க சவுதி அரேபியா ஒப்புக் கொண்டது. இதில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் ரொக்க உதவியாகவும், 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வருடாந்திர எண்ணெய் மற்றும் எரிவாயுவாகவும் வழங்க ஒப்புக்கொண்டது. இந்தக் கடனுக்கு பாகிஸ்தான் 3.2% வட்டி செலுத்தி வந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான உறவை கடுமையாக விமர்சித்திருந்தார். இவரின் விமர்சனத்தால் கடுப்பாகிய சவுதி அரேபியா அரசு, தான் பாகிஸ்தானுக்கு ரொக்கமாக கொடுத்த 3 பில்லியன் டாலர் கடனை திருப்பி கேட்டது. அதன்படி, 1 பில்லியன் டாலர் கடனை கடந்த மே மாதம் சவுதிக்கு கொடுத்தது. எனினும் மீதமுள்ள 2 பில்லியன் டாலர் கடனை கேட்டு நச்சரிக்கத் தொடங்கியது சவுதி. பொருளாதார சிக்கலில் உள்ள பாகிஸ்தான், இந்தக் கடனை கொடுக்க முடியாமல் தவிர்த்து வந்தது.
இதையடுத்துதான் சவுதி அரேபியாவை மகிழ்விக்கும் செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட தொடங்கியது. அதன்படி, தனது வனச் சட்டங்களை மீறி அரபு அமீரகத்துக்கு சுமார் 150 அரியவகை கழுகுகளை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்தது. எனினும், சவுதி தொடர்ந்து கடனைக் கேட்டு வந்தது. போதாக்குறைக்கு பாகிஸ்தானுக்கு கொடுத்த வந்த கச்சா எண்ணெயையும் நிறுத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கைகொடுக்க சீனா முன்வந்துள்ளது. ஆம், சவுதி கடனை அடைப்பதற்காக பாகிஸ்தானுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இதில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் சவுதிக்கு இன்று திருப்பித் தர உள்ளதாக கூறப்படுகிறது.
தூக்கிலிடப்பட்ட பத்திரிகையாளர்... ஈரானுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பலை!
இதுபோக மீதமுள்ள 1 பில்லியன் அமெரிக்க டாலர் ஜனவரியில் தரப்படும் என பாகிஸ்தான் நிதி அமைச்சக வட்டாரங்கள் ட்ரிப்யூன் செய்தி நிறுவனத்துடன் தெரிவித்துள்ளன. இதற்கு முன்பு, சீனா பாகிஸ்தானுக்கு SAFR வைப்பு என அழைக்கப்படும் வெளிநாட்டு அந்நிய செலாவணி நிர்வாகத்திடமிருந்து கடனை கொடுத்து வந்தது. இந்த முறை சிஎஸ்ஏ எனப்படும் இருதரப்பு நாணய - இடமாற்று ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடன் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு