டெல்லியில் விவசாயிகள் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் சீக்கிய சமூகத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள இணக்கமான உறவு குறித்த விவரங்களை ஹைலைட் செய்து ஐ.ஆர்.சி.டி.சி தனது சுமார் 2 கோடி பயனர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளது.
Got this mail from IRCTC ?#FarmersProtest pic.twitter.com/kybq0h5CWy — Ishank Chauhan (@ishank_c) December 10, 2020
இந்த மெயில் அனைத்தும் கடந்த டிசம்பர் 8 முதல் டிசம்பர் 12க்குள் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதில் பிரதமர் மோடி சீக்கிய சமூகத்தினரை ஆதரித்து சொல்லியிருந்த 13 தீர்மானங்கள் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள சட்டங்கள் குறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் “PM Modi and his government's special relationship with Sikh” என்ற தலைப்பில் 47 பக்க கையேட்டை ஐ.ஆர்.சி.டி.சி. மெயில் செய்துள்ளது.
ஹிந்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலத்தில் இந்த கையேடு அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீக்கிய சமூகத்தினருக்கு மட்டும் தான் இந்த மெயில் அனுப்ப பட்டுள்ளதா என்ற கேள்விக்கு ஐ.ஆர்.சி.டி.சி மறுப்பு தெரிவித்துள்ளது. “இந்த மெயில் அனைவருக்கும் அனுப்பியுள்ளோம். அரசின் மக்கள் நல திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல இது மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அதிகார பூர்வமாக ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.
ரயில் டிக்கெட் பதிவு செய்யும் போது பயணிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளும் மெயில் ஐடியின் அடிப்படையில் இந்த மெயிலை ஐ.ஆர்.சி.டி.சி அனுப்பியுள்ளது. இந்த கையேட்டை மத்திய அரசு குரு நானக் ஜெயந்தி அன்று கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஐந்து நாட்களில் சுமார் 1.9 கோடி பேருக்கு இந்த மெயில் அனுப்பபட்டுள்ளது.
Source: https://bit.ly/2Wb5Ylc
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!