நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கள் பாடலான “ தமிழன் பாட்டு” வெளியாகும் தேதியை சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்திற்காக நடிகர் சிலம்பரசன் கடினமான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்த, நிலையில் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதில், சிம்பு பாம்பை கையில் வைத்திருந்தது சர்ச்சையாகி விலங்கு நல வாரியம் கண்டனம் தெரிவித்த நிலையில், அது குறித்து படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈஸ்வரன் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக வெளியாக உள்ள “ தமிழன் பாட்டு” நாளை (திங்கள்கிழமை) காலை பத்து மணிக்கு வெளியாகும் என்றும் லிரிக் வீடியோ மாலை 4. 50 மணிக்கு வெளியாகும் என்றும் சிலம்பரசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்புகளை முடித்த சிலம்பரசன் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?