மதுரை மாவட்டம் கள்ளிகுடி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபரின் உடலை போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிகுடி அருகே குராயூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் மாரியம்மாள் தம்பதியினரின் ஒரே மகன் திருமுருகன். இவர் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமுருகன் அருகிலிருந்த தாத்தா வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த மக்கள் போலீசாருக்கு தெரியாமல் உடலை எரிக்க சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து இதுகுறித்த தகவல் கள்ளிக்குடி போலீசாருக்கு கிடைத்துள்ளது. திருமங்கலம் நகர் காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபர் திருமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வாலிபரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் வாலிபரின் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய முற்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி