மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகரித்துள்ளது. 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மம்தா அரசு நிராகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் அரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவதற்காக பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனால் திரிணாமூல், பாஜக தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தா சென்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகன அணிவகுப்பின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதுபோல, நட்டாவின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு மாற்றியும் ஆணையிட்டது. இதை மம்தா அரசு ஏற்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சர் சுப்ரதா முகர்ஜி, தேர்தலில் மம்தாவை வீழ்த்த முடியாவிட்டால், அவரை கொலை செய்வதற்கு பாஜக சதி திட்டம் தீட்டும் என குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, பாஜக எம்.எல்.ஏ. அர்ஜூன் சிங் வீட்டுக்கு சோதனை நடத்துவதற்காக சென்ற காவலர்களை அவர் திருப்பி அனுப்பினார்.
Loading More post
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி