பெண் ஆட்சியரிடம் தவறாக நடந்து கொண்ட தெலங்கானா எம்எல்ஏ ஷங்கர் நாயக் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தெலங்கானாவில் அரசு சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மகபூபாபாத் மாவட்ட ஆட்சியர் மீனா, மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஷங்கர் நாயக் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஆட்சியர் மீனாவிடம் எம்எல்ஏ ஷங்கர் நாயக் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அதிக கோபமடைந்த மீனா உடனடியாக அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றுவிட்டார். மற்ற அதிகாரிகள் மூலம் மரம் நடும் விழா நடந்து முடிந்தது.
இதனையடுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்ட எம்எல்ஏ குறித்து ஆட்சியர் மீனா, மாநில தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுக்க அவர், இவ்விவகாரத்தை முதலமைச்சர் சந்திர சேகர்ராவிடம் கொண்டு சென்றார். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ ஷங்கர் நாயக் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஷங்கர் நாயக் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?