வான்வெளியில் 800 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்ற உள்ளது.
800ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி தோன்றவுள்ளது. இயேசு கிறிஸ்து பிறந்த போது, வானில் தோன்றியதாக கூறப்படும் வால் நட்சத்திரத்தை போல் இருப்பதால் இந்த நட்சத்திரத்திற்கு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என அறிவியலாளர்கள் பெயர் வைத்துள்ளனர்.
சூரிய குடும்பத்தில் பல மில்லியன் மைல் தொலைவில் உள்ள மிகப்பெரிய கோள்களான வியாழனும், சனியும் அருகருகே வரும் போது, தோன்றும் ஒளி இணைப்பே கிறுஸ்துமஸ் நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றி வரும் இவ்விரு நட்சத்திரங்கள் அருகருகே வரும் போது ஏற்படும் ஒளி இணைப்பு கீழ்வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரமாக ஜொலிக்கும்.
பூமியிலிருந்து பார்க்கும் போது இரண்டு கிரகங்களும் அருகருகே இருப்பது போல் தோன்றினாலும் அவற்றுக்கு இடையேயான தொலைவு மிக அதிகம் என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். 226 ஆம் ஆண்டு வியாழனும், சனியும் அருகருகே வந்ததால் தென்பட்ட கிறிஸ்துமஸ் நட்சத்திரம், மீண்டும் 1623ஆம் ஆண்டு ஜொலித்திருக்க வேண்டும். ஆனால், அப்போதைய காலநிலைகளால் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரியவில்லை.
அதனால், 800 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 21ஆம் தேதி தோன்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை வானிலை ஆய்வாளர்கள் உற்றுநோக்கி வருகின்றனர். டிசம்பர் 20ஆம் தேதி சூரிய மறைவிலிருந்து 22ஆம் தேதி சூரிய உதயம் வரை இந்த நிகழ்வு நடந்தாலும், 21ஆம் தேதி இரவுதான் தெளிவாக காணமுடியும். பூமி பந்தின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் கிருஸ்துமஸ் நட்சத்திரத்தை கண்டு ரசிக்கலாம். டெலஸ்கோப், பைனாகுலர் உதவியிருந்தால் தெளிவாக பார்க்க முடியும்.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்