இந்திய - ஆஸ்திரேலிய ஏ அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்று வரும் 3 நாள் பகலிரவு பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெறும். பொதுவாகவே பகலிரவு டெஸ்ட் போட்டி என்றாலே பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படும். இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னோட்டமாக மூன்று நாள் பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம் சிட்னியில் இன்று தொடங்கியது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயாங்க் அகர்வால் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். இதில் மயாங்க் அகர்வால் 2 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து பிருத்வி ஷாவுடன், சுப்மன் கில் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர்.
டெஸ்ட் போட்டிபோல அல்லாமல் அதிரடியாக விளையாடிய பிருத்வி ஷா 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அவர் ஆட்டமிழந்த பிறகு, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வ சுப்மன் கில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் வேகமாக சரியத் தொடங்கியது. விஹாரி 15, ரஹானே 4, ரிஷப் பன்ட் 5 ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
மேலும் சாஹா 0, முகமது சமி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் இறுதியாக வந்த பும்ராவும், சிராஜூம் நிதானமாக விளையாடினர். இறுதியாக பும்ரா அரைசதம் கடந்து 55 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிராஜ் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பிங்க் பந்தில் ஆஸ்திரேலிய ஏ அணியின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர்.
ஆஸ்திரேலிய பவுலர்கள் அபோட் மற்றும் ஜாக் வைல்டர்முத் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இப்போது ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழந்து 16 ரன்களுடன் விளையாடி வருகிறது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?