பட்ஜெட் போனில் ரசிகர்களை கவர்ந்த ரெட்மி தன்னுடைய அடுத்த மாடலான Redmi 9 Powerஐ இந்தியாவில் வரும் 17ம் தேதி மதியம் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த அறிவிப்பை Redmi Indiaட்விட்டர் பக்கம் மூலம், சியோமி அறிவித்துள்ளது. “power packed” என்ற மாடலாக இது அறிமுகமாகவுள்ளது. சமீபத்தில் சீனாவில் வெளியான Redmi Note 9 4G மாடலின் வெர்ஷனாக இந்தியாவில் Redmi 9 Power அறிமுகம் செய்யப்படுவதாக தெரிகிறது. ரெட்மியின் அறிவிப்பின்படி, டிசம்பர் 17ம் தேதி மதியம் 12 மணிக்கு Redmi 9 Power மாடல் இந்தியாவில் அறிமுகமாவுள்ளது. அமேசானில் இது கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
64GB மற்றும் 128GB மெமரிகள் கொண்ட இருவேறு மாடல்களை கொண்டுள்ளது. இரண்டு வகையான போன்களும் 4 GB ரேம் கொண்டதாக இருக்கும். 6.53 இஞ்ச் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 1080*2340 பிக்சல் ரெசோலேஷன், Android 10 OS ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
கேமராவை பொருத்தவரை, 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 48 மெகா பிக்சல்+8 மெகா பிக்சல்+2 மெகா பிக்சல் ஆகிய 3 வகையான பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. அதிவேக சார்ஜிங் சிறப்பம்சத்துடன் இந்த மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. 4 வெவ்வேறு வண்ணங்களில் இந்த போன் வெளியாகவுள்ளது. விலை மற்ற தள்ளுபடி நிலவரங்கள் போன் வெளியீட்டின்போதே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!