[X] Close >

டிராவிட்டிற்கு பின் விக்கெட் கீப்பராக தோனி தேர்வான கதை இதுதான்! - கிரண் மோர் 

Kiran-More-tells-the-story-of-How-MS-Dhoni-was-Selected-by-BCCI-Selectors-to-play-for-the-Indian-cricket-team

சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த ஃபினிஷர், சிறந்த கேப்டன், சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த பேட்ஸ்மேன் என அனைத்திலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை சொல்லலாம். அந்த அளவிற்கு தனது ஆட்டத்தின் மூலம் சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர் அவர். கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.


Advertisement

image

இந்நிலையில் தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட தேர்வானது எப்படி என்பதை தெரிவித்துள்ளார் அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் கிரண் மோர்…


Advertisement

“ராகுல் டிராவிட் இந்தியாவுக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சுமார் 75 ஆட்டங்களில் கீப்பராக விக்கெட் கீப்பிங் பணியை கவனித்துள்ளார். அவருக்கு அந்த பணியிலிருந்து ஓய்வு கொடுப்பதற்காக திறமையான இளம் விக்கெட் கீப்பரை தேடிக் கொண்டிருந்தோம். அப்போது தான் தோனி குறித்து அறிந்தோம். 

image

கிரிக்கெட் விளையாட்டில் அவரது அணுகுமுறை வித்தியாசமாக எங்களுக்கு தெரிந்தது. அதனால் கென்யா அணியுடன்  விளையாட தோனியை இந்திய ஏ அணிக்காக தேர்வு செய்தோம். அந்த பயணத்தில் தோனி 600 ரன்களுக்கு மேல் விளாசியிருந்தார். அதுவரை இந்திய அணியின் ஹிட்டார்களாக ஷேவாக்கும், யுவராஜும் தான் இருந்தார்கள். ஆனால் அவரது வருகை அணியில் புது தெம்பை கொடுத்தது. மற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருந்தும் தோனியை அணியில் விளையாட தேர்வு செய்ய காரணமே அவரது அதிரடி ஆட்டம் தான். தோனியின் வருகை இந்திய கிரிக்கெட் அணியின் போக்கையே மாற்றியது” என அவர் தெரிவித்துள்ளார்.   


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close