வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என மு.க.அழகிரி கூறியது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “கட்சி தொடங்க இருக்கும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன். வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம். தேர்தலில் பங்களிப்பு என்பது பலவிதமாக உள்ளது. அதைப்பற்றி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, ஓட்டு போடுவதுகூட ஒரு பங்களிப்புதான். ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ரஜினியுடன் கூட்டணி வாய்ப்பு குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது” எனத் தெரிவித்தார். முன்னதாக வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.
Loading More post
தஞ்சை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு? 2வது டோஸ் போடவந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு
’’பல புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளியுங்கள்” - பிரதமருக்கு சோனியா கடிதம்
கோவை: ஓட்டலுக்குள் புகுந்து அத்துமீறி தாக்கிய விவகாரம்: எஸ்.ஐ முத்து பணியிடை நீக்கம்
தமிழகத்தில் 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்