[X] Close >

விஜய் சேதுபதியின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு துவக்கம்!

Kaathu-Vaakula-Rendu-Kadhal-shooting-starts-today

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. பூஜையில் நடிகர் விஜய் சேதுபதியும் விக்னேஷ் சிவனும் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

image

கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் ’போடா போடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், தனுஷ் தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். காமெடி கலந்த காதல் கதையில் நயன்தாரா காதுகேட்காத பெண்ணாக நடித்து பாரட்டுக்களைக் குவித்தார்.


Advertisement

image

விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவனின் இந்தக் கூட்டணி வெற்றி கூட்டணியானது. இந்நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்குவதாக அறிவித்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா இணையும் இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக சமந்தாவும் நடிக்கிறார்.

image


Advertisement

கொரோனா சூழலால் தடைப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ள நிலையில், இன்று நடந்த பூஜையில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் விஜய் சேதுபதியும் உற்சாகமுடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close