ஐசிசி டி20 பவுலிங் தரவரிசையில் பத்து இடங்கள் முன்னேறி 11வது இடத்தை பிடித்துள்ளார் இந்திய பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர்!
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்த நிலையில் வரும் 17 ஆம் தேதி ஆரம்பமாக உள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர்.
Bowled! Washington Sundar strikes again!
Smith departs for 24.
Live - https://t.co/5obpq8o9yM #AUSvIND pic.twitter.com/hAAIO7sjUm— BCCI (@BCCI) December 8, 2020Advertisement
இந்த டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் விளையாடிய அவர் முதல் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் 35 மற்றும் 34 ரன்களை கொடுத்திருந்தாலும் கடைசி ஆட்டத்தில் ஃபின்ச் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் என ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களை வீழ்த்தி இருந்தார்.
Washington Sundar jumped 10 places to reach No.11 in the @MRFWorldwide ICC Men's T20I Bowling Rankings after the series against Australia ? pic.twitter.com/iuhOTYxDSK
— ICC (@ICC) December 9, 2020Advertisement
இந்நிலையில் 614 புள்ளிகளை பெற்று சர்வதேச டி20 போட்டிகளுக்கான பவுலிங் தரவரிசையில் முதல்முறையாக 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பத்து இடங்கள் நேரடியாக முன்னேறி இந்த இடத்தை அவர் பிடித்துள்ளார். இதுவரை 26 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 21 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
Loading More post
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ