இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மும்பை நகரம். இந்தியாவின் பிரபலங்கள் அதிகம் வாழும் நகரம் மட்டுமல்லாது பல லட்சம் பேருக்கு வாழ்வாதாரமும் கொடுத்து வருகிறது மும்பை. இந்நிலையில் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது மும்பை போலீஸ்.
அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் தனது முடியை திருத்தும் சலூன் கடை ஊழியரிடம் “தயவு செய்து இதை செய்யாதீர்கள்” என்றும் முடியை வெட்ட வேண்டாமென்றும் உரத்த குரலில் சொல்கிறான். அதை வீடியோவை செல்போனில் பதிவு செய்து சிறுவனின் தந்தை சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்துள்ளார். அந்த வீடியோ பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.
இந்நிலையில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மும்பை போலீசார் அதன் மூலம் பொதுமக்களுக்கு மாஸ்க் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளதோடு “அன்பான மும்பை வாழ் மக்களே வீட்டில் இருந்து மாஸ்க் அணியாமல் வருபவர்களிடம் இதை சொல்லுங்கள்” என கேப்ஷன் போட்டுள்ளது. தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி