பாகிஸ்தான் கொடுக்கும் உணவை சாப்பிடுபவர்கள் விவசாயப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் என சத்தீஸ்கரை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான ஆர்.பி சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் இயற்றப்பட்டுள்ள விவசாய மசோதாக்களுக்கு எதிராக கடந்த 13 நாட்களாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சார்பாக போராட்டம் நடந்து வருகிறது. பலமுறை விவசாயிகள் மற்றும் அரசுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், டிசம்பர் 8-ஆம் தேதி விவசாயிகள் நாடு தழுவிய ‘பாரத் பந்த் என்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதையொட்டி இன்று நாடு முழுவதும் பார்த் பந்த் போராட்டம் நடந்துவருகிறது. இதைத் தொடர்ந்து நாளை மீண்டும் மத்திய வேளாண் துறை அமைச்சருடன் விவசாயிகளின் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகெல், ‘’சத்தீஸ்கர் மாநிலம் உட்பட நாடு முழுவதும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு உள்ளது’’ என்று ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டிற்கு பதிலளிக்கும் வகையில், எதிர்க்கட்சியினரை சுட்டிக்காட்டி, ‘’இந்திய விவசாயிகள் விளைவித்த உணவை சாப்பிடுபவர்கள், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்; ஆனால் பாகிஸ்தான் கொடுத்த உணவை சாப்பிடுபவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்’’ என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
Loading More post
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!