தைவான் நாட்டில் கொரோனாவுக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்த நபர், அறையை விட்டு வெளியே வந்ததால் அவருக்கு அந்நாட்டு மதிப்பில் ஒரு லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி தைவான் நாட்டில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் கொரோனா பரவல் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டார். இதற்காக அவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டார். அவர் அறையை விட்டு வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த நபர் அனுமதியை மீறி வெளியே வந்ததோடு மட்டுமல்லாமல், ஏதோ ஒன்றை அருகில் இருந்த மற்றொரு நோயாளியின் அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த மேசையில் வைத்தார். அவரது இந்த நடவடிக்கை அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமாராக்களில் பதிவானது. இந்தக் காட்சிகளின் அடிப்படையில், அவர் 8 விநாடிகள் அறையை விட்டு வெளியே இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுத்த தைவான் அரசு, அவருக்கு அந்நாட்டின் மதிப்புப்படி 1 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 2.65 லட்சம் ஆகும். கொரோனா பரவல் காரணமாக தைவான் நாட்டில், கண்டிப்புடன் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!