ராஜஸ்தான் மாநிலத்தில் மனைவியை கொன்றுவிட்டு, சடலத்திற்கு அருகில் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் பிஜேஸ் காலணிப் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் சிங் (35). இவரது மனைவி சிவ் கன்வர் (30). விக்ரம் வேலைக்குச் செல்லாத நிலையில் அவரது மனைவி வேலைக்குச் சென்று வீட்டைக் கவனித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று கன்வர் வீட்டிலிருந்து பணியாற்றிய நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த விக்ரம் அவரது மனைவியை இரண்டு கத்திரிக்கோல்களைப் பயன்படுத்தி கொடூரமாக கொலை செய்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்ற போது, விக்ரம் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போன்று தனது செல்போனில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார். அவரது மனைவி அறையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று அவர்கள் வீட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. விக்ரமை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி