விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பாடலாசிரியர் வைரமுத்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 13 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் எதிர்கட்சிகளும், சினிமா துறையினரும், விளையாடுத் துறையினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறுக் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்த பதிவு:
ரத்தம் உறையும் குளிரிலும்
சித்தம் உறையாத
விவசாயிகளின் போராட்டத்தைக்
கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன;
அதை நீளவிடக்கூடாது.
இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும்
மனம் திறக்க வேண்டுமென்று
மக்கள் விரும்புகிறார்கள். — வைரமுத்து (@Vairamuthu) December 8, 2020
“ரத்தம் உறையும் குளிரிலும்
சித்தம் உறையாத
விவசாயிகளின் போராட்டத்தைக்
கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன;
அதை நீளவிடக்கூடாது.
இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும்
மனம் திறக்க வேண்டுமென்று
மக்கள் விரும்புகிறார்கள்” என்று ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!