மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளை பாதிக்கும் என்று தலைநகர் டெல்லியில் கடந்த 13 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு விவசாயிகளை அழைத்து பேசியது இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் நாளை மீண்டும் மத்திய அரசுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தை தீவிரம் படுத்தும் விதமாக இன்று நாடுமுழுவதும் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவதோடு பல இடங்களில் கடைகளையும் அடைத்து டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது என்றும். உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள் என்றும். உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை!
# Stand with Farmers என நடைபெறும் # Bharat Bandh வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு