[X] Close >

முன்னாள் டிஜிபி மீதான நிலமோசடி புகாரில் ஆதாரங்கள் உள்ளன: நீதிமன்றத்தில் நடிகர் சூரி தகவல்

i-have-evidence-related-to-the-land-scam-complaint--Actor-Soori-informed-the-court

நில மோசடி புகாரில் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா ஈடுபட்டதற்கான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக நடிகர் சூரிதரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவற்றை காவல்துறையிடம் வழங்க நீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது.


Advertisement

image

நிலமோசடி தொடர்பாக, முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன்  ஆகியோருக்கு எதிராக அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரி புகார் அளித்தார். அந்த புகாரை விசாரிக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு, தன் புகார் மீது  உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி நடிகர்  சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


Advertisement

இந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், போலீசார் முறையாக விசாரித்து வருவதாகக் கூறி, விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நடிகர் சூரி தரப்பில், நில மோசடி தொடர்பாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலாவின் ஆடியோ பதிவு மற்றும் ஆதாரங்களை  வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதை  விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால், அதுசம்பந்தமாக விசாரிக்க போலீசார் தயாராக இருப்பதாக காவல் துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை பதிவு செய்த  நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சூரியிடம் உள்ள ஆதாரங்களை  காவல்துறையிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைக்க கூறி, விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close