இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதோடு தொடரையும் 2 - 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 194 ரன்களை குவித்தது. தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய இந்தியாவிற்கு தவனும் - கே.எல். ராகுலும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
தொடர்ந்து களம் இறங்கிய கோலியும் 24 பந்துகளில் 40 ரன்களை அடித்தார். அதில் 2 பவுண்டரிகளும், 2 சிக்ஸரும் அடங்கும். அதில் ஒரு சிக்ஸரை ஸ்கூப் ஷாட்டாக அடித்திருப்பார். ஆட்டத்தின் 15வது ஓவரை ஆண்ட்ரு டை வீசியிருப்பார். அந்த ஓவரின் நான்காவது பந்து ஆப் லைனில் வீசப்பட்டிருக்கும். ஆனால் கோலி இரண்டடி முன்னாள் நகர்ந்து வந்து ஸ்கூப் ஷாட் ஆடி அந்த பந்தை ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் அடித்திருப்பார். இது மாதிரியான ஷாட்டை 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஆடுவது தான் வழக்கம். அதனால் ஏபிடி இந்தியாவின் ப்ளூ ஜெர்சியில் ஆடுவதை போல இருக்கிறது கோலியின் ஷாட் என ரசிகர்களும், விமர்சகர்களும் சொல்லி வருகின்றனர்.
?????@imVkohli — AB de Villiers (@ABdeVilliers17) December 6, 2020
இதே மாதிரியான ஷாட்டை கோலி ஐபிஎல் தொடரிலும் ஆடியது உண்டு. கோலியின் ஷாட்டை ஏபி டிவில்லியர்ஸும் சூப்பர் என பாராட்டியுள்ளார். கோலியும், டிவில்லியர்ஸும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி