இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதோடு தொடரையும் 2 - 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த போட்டியில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஒய்வு எடுத்துக் கொள்ள தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார் விக்கெட் கீப்பரான மேத்யூ வேட்.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 194 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் தவன் சிறப்பாக விளையாடினார். இந்தியா பேட்டிங் செய்த போது ஒன்பதாவது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மிச்சேல் ஸ்வெப்சன் வீசினார். அந்த ஓவரில் வைடாக வீசப்பட்ட பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த தவன் மிஸ் செய்ய, பந்தை பற்றியவுடன் ஸ்டெம்பிங் செய்ய முயன்று இருப்பார்.
இருப்பினும் அதை மிஸ் செய்த அவர் “தோனி அளவுக்கு வேகம் இல்லை தானே” என தவனிடம் கேட்டிருப்பார். அது ஸ்டெம்பில் இருந்த மைக்கில் பதிவாகியுள்ளது. தவனும் இல்லை என்பதை போல சிரித்த படி அடுத்த பாலை எதிர்கொள்ள தயாராவர்.
"Not Dhoni, not quick enough like Dhoni!" ?
Live #AUSvIND: https://t.co/L1KY15FYnb pic.twitter.com/IOC7NH2xgb — cricket.com.au (@cricketcomau) December 6, 2020
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் மின்னல் வேக ஸ்டெம்பிங்கிற்காக பரவலாக அறியப்படுபவர். அவரை நினைவு படுத்தும் விதமாக வேட் பேசியிருந்தாலும் அது தோனியின் ரசிகர்களை கடுப்பேற்றியதால் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?