இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் விளையாடி வரும் இளம் வீரர் சுப்மன் கில்லை TROLL செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடினார் கில். இரண்டாவது விக்கெட்டிற்கு கேப்டன் கோலியுடன் இணைந்து 56 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பும் அமைத்திருந்தார். அதோடு 39 பந்துகளில் 33 ரன்களையும் அவர் சேர்த்திருந்தார். இந்த போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் கோலியுடன் பேட்டிங் செய்த படத்தையும், ஃபீல்டிங்கின் போது அணியினருடன் நிற்கின்ற படத்தையும் பகிர்ந்து “நாட்டுக்காக விளையாடுவதில் பெரு மகிழ்ச்சி” என கேப்ஷன் கொடுத்திருந்தார். அந்த போஸ்டிற்கு சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ள நிலையில் தனது கமெண்டை யுவராஜ் அதில் பதிவு செய்துள்ளார்.
“சர்வதேச கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் உடன் நீங்கள் விளையாடுவதை பார்த்து ஆனந்தம் கொள்கிறேன். தயவு செய்து முதலில் பாக்கெட்டுகளிலிருந்து கையெடுங்கள். நீங்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள், உள்ளூர் கிளப்பிற்காக அல்ல” என சொல்லியுள்ளார் யுவராஜ்.
யுவராஜும், கில்லும் இணைந்து இந்த ஆண்டு கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்