[X] Close >

“தோனியின் பிளானை பாலோ செய்து ஹர்திக் உடன் விளையாடினேன்” - ஜடேஜா

I-followed-MS-Dhoni-s-plan-and-played-with-Hardik-Pandya-against-Australia-in-third-ODI-says-Ravindra-Jadeja

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையே அமைந்த பார்ட்னர்ஷிப். இருவரும் ஆறாவது விக்கெட்டிற்கு 150 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை 302 என உயர்த்தினர். ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்கள் விளாசி இருந்தார். அதில் 3 சிக்ஸர் 5 பவுண்டரிகள் அடங்கும். 


Advertisement

அந்தப்போட்டியில் 45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. அப்போது ஜடேஜா 35 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதேபோல், ஹர்திக் பாண்ட்யா 61 பந்துகளில் 59 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பின்னர் இருவரும் கடைசி 5 ஓவர்களில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி தள்ளினர். கடைசி 5 ஓவரில் மட்டும் இந்திய அணி 76 ரன்கள் குவித்தனர். 

image


Advertisement

இந்நிலையில் தோனியின் பிளானை பாலோ செய்து ஹர்திக் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினேன் என தெரிவித்துள்ளார் ஜடேஜா. “தோனி பாய் (அண்ணன்) இந்தியாவுக்காகவும், சென்னை அணிக்காகவும் நிறையை ரன்களை சேர்த்துள்ளார். அவர் கிரீஸுக்கு வந்தால் பேட்ஸ்மேன்களுடன் பார்ட்னர்ஷிப் அமைக்கவும், செட்டாகவும் முயற்சி செய்வார். அது தான் அவருடைய பேட்டர்ன். அதன் மூலம் பெரிய ஷாட்களை கூலாக ஆடி அசத்துவார்.


Advertisement

அப்படி அவர் பலமுறை விளையாடியதை அவருக்கு பக்கத்தில் இருந்து பேட்ஸ்மேனாக பார்த்தும், அது மாதிரியான சூழலில் அவருடன் விளையாடியும் உள்ளேன். அது போல விளையாடும் போது நிறைய ரன்களை சேர்க்க கடைசி 4 - 5 ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து சென்றாலே போதும் என சொல்வார். அதை தான் ஹர்திக் உடனான பார்ட்னர்ஷிப்பில் நான் செய்தேன். இறுதி வரை விளையாடி கடைசி சில ஓவர்களில் ஆன் சைடில் ரன்களை சேர்ப்பது தான் எங்கள் திட்டம். அதை சரியாக செய்தோம்” என்கிறார் ஜடேஜா. 

ஜடேஜா தோனியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close