இப்போது வருவார் அப்போது வருவார் என்று எதிர்பாக்கப்பட்ட ரஜினி தற்போது தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறார். ’ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்போவும் இல்ல’ என்று கூறியிருப்பதோடு ’வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான ஊழலற்ற, சாதிமதமற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அதிசயம் நிகழும்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், அவரின் உறவினரும் இசையமைப்பாளருமான அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில்
இனி தான் ஆரம்பம்..
தலைவர் ஆட்டம் ஆரம்பம் ??????#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல pic.twitter.com/zj8amBXklR — Anirudh Ravichander (@anirudhofficial) December 3, 2020
’இனிதான் ஆரம்பம்; தலைவர் ஆட்டம் ஆரம்பம்’ என்று ரஜினியின் ட்வீட்டை ரீட்விட் செய்து வரவேற்றுள்ளார். அவரைத்தொடர்ந்து ரஜினியின் ‘பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ‘வாவ்… தலைவா வா தலைவா’ என்று ரஜினியின் அரசியலை வரவேற்றுள்ளார்.
Wow....... Thalaivaaaaa வா தலைவா ????#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல https://t.co/wC8N4Ioalx — karthik subbaraj (@karthiksubbaraj) December 3, 2020
இந்நிலையில், ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாத்தும் ரஜினியின் ட்விட்டை ரீட்விட் செய்து மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ?????? https://t.co/TQvWC9Jc5r — soundarya rajnikanth (@soundaryaarajni) December 3, 2020
Loading More post
"ஈம சடங்கு நிகழ்ச்சிக்காவது அனுமதி கொடுங்க” - தெருக்கூத்துக் கலைஞர்கள் கோரிக்கை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?