லவ் ஜிஹாத் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விரும்பிய நபரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது ஒருவரது அடிப்படை உரிமை என கர்நாடகா உயர் நீதிமன்றம்.
சமீபத்தில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வாஜீத் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயர் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்கு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அவரை அடைத்து வைத்திருப்பதாக மனுதாக்கல் செய்திருந்தார். ரம்யாவும், தானும் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர் என்றும், வித்யாரன்யபுராவில் உள்ள மஹிலா தக்ஷதா சமிதி என்ற பகுதியில் வசித்து வருவதாகவும், தனது காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் வாஜீத்தை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுஜாதா மற்றும் சச்சின் ஷங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘’இந்திய சட்டத்தின்படி, திருமண வயதை எட்டியவர்கள் தங்களுடைய விருப்பத்தின்படி வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது அவரவர் அடிப்படை உரிமை; அவர்களை ஜாதி, மதம் என்ற பெயரில் தடுப்பது கூடாது’’ எனக் கூறியதுடன், ரம்யாவை உடனடியாக பெற்றோரின் பிடியிலிருந்து விடுதலை செய்யும்படிக் கூறி உத்தரவிட்டனர்.
விவசாயிகள் போராட்டம்: 'ஸ்விகி'-யின் 'பதிலடி' ட்வீட்டுக்கு வரவேற்பும் எதிர்ப்பும்!
சமீப காலமாக லவ் ஜிஹாத் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை திருமணம் செய்வதற்கு எதிர்ப்புகள் கிளம்பிவரும் நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் இப்படியான கருத்தினை தெரிவித்துள்ளது.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்