7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்தாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் உத்ரவாதம் அளித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதில் இடம் கிடைத்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகளான சிதம்பரத்தை சேர்ந்த தர்ஷினி, இலக்கியா ஆகியோருக்கு கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அப்போது தனியார் கல்லூரிகளில் மட்டுமே இடம் கிடைத்ததால் அவற்றை தேர்வு செய்யாமல் விட்டுவிட்டனர். இதையடுத்து 20 ஆம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில் 7.5 உள் ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தாலும் அவர்களின் கட்டணத்தை அரசு ஏற்கும் என அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் மாணவிகள் இருவரும் தங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் சீட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்தார். இதையடுத்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யக்கோரி வழக்கை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு