இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கான்பரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மயங்க் அகர்வால், ஷமி, சாஹல் மற்றும் சைனிக்கு மாற்றாக சுப்மன் கில், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் மற்றும் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். தவானும், கில்லும் இந்தியாவுக்காக இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் தவான் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த கோலியுடன் இணைந்து கில் நிதானமாக விளையாடினார். இருப்பினும் 56 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கில் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Second successive fifty for Captain Kohli! ??
Will he take #TeamIndia to a formidable total? #AUSvIND
India 133/4 after 28 overs.
Scorecard:. https://t.co/VO9QlU3cB6 pic.twitter.com/y2SH2Pl0hP— BCCI (@BCCI) December 2, 2020Advertisement
கேப்டன் கோலி பொறுப்போடு விளையாடி 63 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து வந்த ஷ்ரேயஸும், கே.எல்.ராகுலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். 152 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்தியா இழந்த நிலையில் பாண்ட்யாவும், ஜடேஜாவும் 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Hardik Pandya moves past fifty! ?
Can he unleash himself in the last four overs?
46 overs gone, #TeamIndia 243/5. #AUSvIND
Scorecard: https://t.co/VO9QlU3cB6 pic.twitter.com/nwwoKsjVih— BCCI (@BCCI) December 2, 2020Advertisement
பாண்ட்யா 92 ரன்களும், ஜடேஜா 66 ரன்களும் குவித்தனர். 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது இந்தியா.
200 up for #TeamIndia. #AUSvIND
Scorecard: https://t.co/VO9QlU3cB6 pic.twitter.com/xrFHSK0HCn — BCCI (@BCCI) December 2, 2020
ஆஸ்திரேலியாவுக்காக சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஷ்டன் அகர் மற்றும் ஆடம் சாம்பா சிறப்பாக பந்து வீசி இருந்தனர். பத்து ஓவர்கள் வீசி ஓவருக்கு 4.5 ரன்களுக்கு கீழ் மட்டுமே ரன்களை கொடுத்து இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி, விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’