மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பத்மஸ்ரீ, அர்ஜுனா விருது பெற்றவர்கள் உள்பட பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் தங்கள் விருதுகளை திருப்பித் தருவதாகக் கூறியுள்ளனர்.
பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரர் கர்தார் சிங், அர்ஜுனா விருது பெற்ற கூடைப்பந்து வீரர் சஜ்ஜன் சிங் சீமா மற்றும் அர்ஜுனா விருது பெற்ற ஹாக்கி வீரர் ராஜ்பீர் கவுர் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களும் டிசம்பர் 5 ஆம் தேதி டெல்லிக்குச் சென்று தங்கள் விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் டெல்லிக்குச் செல்வதைத் தடுக்க போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிராக தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தியதாக அவர்கள் மத்திய அரசையும், ஹரியானா அரசையும் கண்டித்துள்ளனர்.
"நாங்கள் விவசாயிகளின் பிள்ளைகள், அவர்கள் கடந்த பல மாதங்களாக அமைதியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒரு வன்முறை சம்பவம்கூட நடக்கவில்லை. ஆனால், அவர்கள் டெல்லிக்குச் செல்லும்போது அவர்களுக்கு எதிராக நீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. எங்கள் பெரியவர்கள் மற்றும் சகோதரர்களின் தலைப்பாகைகள் தூக்கி எறியப்பட்டால், எங்கள் விருதுகள் மற்றும் கவுரவத்துடன் நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? நாங்கள் எங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதனால்தான் விருதுகளை திருப்பித் தருகிறோம்"என்று சஜ்ஜன் சிங் சீமா கூறினார்.
டெல்லி எல்லையில் டிசம்பர் 5 ம் தேதி விவசாயிகளின் போராட்டத்தில் பல முன்னாள் வீரர்களும் சேருவார்கள் என்றும் இவர்கள் கூறியுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று தொடர்ச்சியாக ஆறாவது நாளாக பல்வேறு டெல்லி எல்லைப் பகுதிகளில் முற்றுகையிட்டுள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி