விவசாயிகளுடன் அரசு நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் மூன்று வேளாண் சட்டங்களிலும் உள்ள குறிப்பிட்ட பிரச்னைகளை இன்றைக்குள் அடையாளப்படுத்தும்படி விவசாய பிரதிநிதிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மூன்று வேளாண்சட்டங்களை எதிர்த்து டெல்லியின் பலப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசுடன் விவசாயிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து மத்திய வேளாண்துறை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், விவசாயிகளுடனான சந்திப்பின்போது அவர்களது நலன்களை பாதுகாக்க அரசு உறுதி பூண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் நலன் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம். குறிப்பிட்ட பிரச்னைகளை அடையாளப்படுத்தி அரசிடம் இன்றைக்குள் தெரிவிக்கும்படி விவசாய பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் அரசுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி