[X] Close >

டிஎன்பிஎஸ்சி-யில் தமிழ்வழியில் பயின்றதற்கான ஒதுக்கீட்டின்கீழ் தேர்வானவர்கள் எத்தனை பேர்?

Madurai-bench-questions-how-does-govt-allocates-job-for-education-through-Tamil-language

கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்வழியில் பயின்றதற்கான ஒதுக்கீட்டின்கீழ் தேர்வானவர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1இல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. அதற்கு விண்ணப்பித்து, முதல்நிலைத் தேர்வு, எழுத்து தேர்வில் தேர்ச்சிப் பெற்றேன். ஆனால், அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட நேர்முகத் தேர்வுப் பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை.

தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தெரிவு செய்யப்படவில்லை. விதிப்படி தமிழ்வழியில் கல்வி பயின்றவருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது. அந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நான் தகுதியானவராக இருந்தும், எனக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ்வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது.


Advertisement

image

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் கேட்டபோது எவ்வித தகவலையும் வழங்கவில்லை. TNPSCயின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ்வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர்.
ஆகவே தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்துவது தொடர்பான சட்ட திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் கொணரப்பட்டது. அது ஆளுநரின் ஒப்புதலுக்கான காத்திருப்பில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.


Advertisement

இந்து சமய அறநிலையத்துறை தொலைக்காட்சி தொடங்குவதற்கு உயர்நீதிமன்றம் வரவேற்பு 

அதற்கு நீதிபதிகள், தற்போதுவரை தமிழ்வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டின்கீழ் எதன் அடிப்படையில் நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close