சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்கான ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இட ஒதுக்கீடு தொடர்பான ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்த ஆணையத்தின்கீழ் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு பிரத்யேகமான அறிக்கை அளிக்கப்படும் எனவும் அவர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொருத்தவரை 69% இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பைப் பெற்று, தமிழகம் சமூக நீதி வரலாற்றில் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது. மேலும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு கால கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருவதாகவும், அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டியுள்ள காரணத்தினால், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் இந்த அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது 69% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள புள்ளிவிவரங்கள் தேவை எனவும் அதை சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்