[X] Close >

பேறுகாலத்தில் தலைகீழாக சிரசாசனம் செய்த அனுஷ்கா ஷர்மா - வைரல் புகைப்படம்

Virat-Kohli-Helping-Anushka-Sharma-With-Pregnancy-Yoga-Is-The-Cutest-Thing-You-See-Today

பேறுகாலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

விராட் கோலியும் அவரது மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அனுஷ்கா ஷர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் அவர் தலைகீழாக நின்று யோகாப் பயிற்சி செய்ய, விராட்கோலி அவருக்கு உதவும் வண்ணம் அவரின் காலை பிடித்துள்ளார். அந்தப் பதிவில் “ எனது வாழ்வில் யோகாவிற்கு முக்கியப்பங்கு உண்டு. நான் கர்ப்பம் தரிக்கும் முன்னர் எனது மருத்துவர் இது போன்ற கடினமான யோகா பயிற்சிகளை தந்தார். இந்தப் பயிற்சிகளுக்கு நிச்சயம் ஒருவரின் உதவித் தேவைப்படும்.


Advertisement

சிரசாசனத்தை நான் பல ஆண்டு காலமாக செய்து வருகிறேன். சுவரின் உதவியோடு இந்த ஆசனத்தை செய்த நான், கூடுதல் பாதுகாப்பிற்காக எனது கணவரின் உதவியை கைக்கொண்டேன். யோகாப் பயிற்சியை பிரசவ காலத்திலும் தொடர்வது எனக்கு மகிழ்ச்சிகரமானதாவே உள்ளது. சிரசாசனம் ஆசனங்களில் கடினமான பயிற்சியாகும்.” என்று அவர் பதிவிட்டுள்ளார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close