மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த உடனேயே பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த உடனேயே பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த உடனேயே பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு

அண்மையில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்

1995-ஆம் ஆண்டு பேட்ச் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் சந்தோஷ் பாபு திடீரென்று விருப்ப ஓய்வு அறிவித்தார். இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது. தகவல் தொழில் நுட்பத் துறையின் அரசு செயலாளராக இருக்கும் இவரின் கீழ்தான், தமிழ்நாடு கண்ணாடி வலையமைப்பு நிறுவனம் - 12,524 கிராம பஞ்சாயத்து அமைப்புகள், 528 பேரூராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 15 மாநகராட்சிகளில் அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புக்கான உட்கட்டமைப்பை இணைக்கும் 2441 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், மூத்த ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் சந்தோஷ்பாபு திடீரென விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்து இருப்பதன் பின்னணி என்ன? என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் சந்தோஷ்பாபு தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் முன்னிலையில் அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். கட்சியில் இணைந்த உடனேயே அவரை பொதுச்செயலாளராக நியமித்து கமல்ஹாசன் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com