[X] Close >

மதுரை: புற்றுநோயால் கணவர் இறந்த சோகத்தில் 2 பெண் பிள்ளைகளுடன் தாயும் தற்கொலை

Madurai--A-woman-who-committed-suicide-with-her-two-children-in-the-tragedy-of-her-husband-s-death-due-to-cancer

மதுரையில் புற்றுநோயால் கணவர் இறந்த சோகத்தில், இரண்டு பெண் பிள்ளைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.


Advertisement

image

திருச்சியை சேர்ந்த அருண் என்பவர் மூளை புற்று நோய் பாதிப்புக்குள்ளாகி பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார் . இதன் காரணமாக மதுரையை அடுத்த ஒத்தக்கடை மலைச்சாமி புரத்தில் வீடு எடுத்து தங்கி மதுரையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அருண் உடல்நலக்குறைவால் ஒத்தக்கடையில் உயிரிழந்துள்ளார்.


Advertisement

அருண் மீது அதிக பாசம் கொண்ட அவரது மனைவி வளர்மதி மற்றும் மகள்கள் அகிலா, ப்ரீத்தி ஆகிய 3 பேரும் கணவர் மற்றும் தந்தையை பிரிந்து வாழ முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஏற்கெனவே தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அப்போது உறவினர்கள் அவர்களை காப்பாற்றி மனதைரியம் கொடுத்துள்ளனர். இருந்தாலும் கணவர் மற்றும் தந்தை இல்லாமல் தங்களால் இந்த உலகத்தில் வாழ முடியாது என அடிக்கடி உறவினர்களிடம் பேசி வந்த இவர்கள் மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக வளர்மதி பாசமாக வளர்த்து வந்த தனது தம்பியின் மகள் மேகலாவை வீட்டில் தூங்க வைத்து விட்டு அங்கே சாமி அறையில் சாமிக்கு பூஜை செய்துவிட்டு, இறப்பதற்கு முன்னர் கடவுளை வழிபட்டு விட்டு ஏற்கெனவே உயிரிழந்த அருணின் புகைப்படத்திற்கும், அருணுடன் குடும்பமாக இவர்கள் 3 பேரும் உள்ள புகைப்படத்திற்கு இறப்பதற்கு முன்னரே பூ வைத்துள்ளனர். உயிர் இருந்த கணவர் இல்லாமல் தங்களால் இந்த உலகத்தில் வாழ முடியாது என எழுதி வைத்த வளர்மதி தனது நகைகளை தங்கையிடம் கொடுத்து விடவும், அவர்களது நிலம் உள்ளிட்ட சொத்துக்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தை தனது தாயிடம் கொடுக்கவும் வளர்மதி கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் மேலும் கணவரின் குடும்பத்தினர் தங்களது இறுதிச்சடங்கில் பங்கேற்கக் கூடாது என்ற வரிகளையும் அதில் எழுதியுள்ளார்.

image


Advertisement

இதனையடுத்து தங்கள் செல்லமாக வளர்த்து வந்த வளர்ப்பு நாய்க்கு உணவில் விஷம் வைத்து கொடுத்துவிட்டு பின்னர்  வளர்மதி (38) மற்றும் மகள்கள் அகிலா (19) , ப்ரீத்தி (17) மூன்று பேரும் வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறையில் மின்விசிறி மற்றும் கம்பியில் சேலை கயிறு உள்ளிட்டவற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு முன்பு மூவரும் அவர்களது கைகளில் கூர்மையான கத்தியால் கைகளை அறுத்து ரத்தத்தை வெளியிட்டிருக்கின்றனர். தூக்குப்போட்டு இறப்பது தாமதமானாலும் ரத்தம் வெளியேறி கண்டிப்பாக இறக்க வேண்டும் என இவர்கள் தீர்க்கமான முடிவுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

காலையில் வெகு நேரம் ஆகியும் யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியும் கதவை திறக்காததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்கள் மற்றும் கடிதத்தை கைப்பற்றிய விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் நேரில் வந்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி விட்டு சென்றுள்ளார். மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close