நடிகர் விக்ரம் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், சென்னை பெசன்ட்நகர் அருண்டேல் பீச் ரோட்டில் வசித்து வரும் நடிகர் விக்ரமின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக்கூறி இணைப்பை துண்டித்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலின் அடிப்படையில் திருவான்மியூர் போலீசார் விக்ரம் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக நடிகர்கள் விஜய், அஜித் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக “கோப்ரா”படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு வேலைகளை முடித்துள்ள நடிகர் விக்ரம், தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்‘ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?