கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே பைக்குக்கு குறுக்கே மாடு பாய்ந்ததில் பொறியியல் பட்டதாரி வாலிபர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மாத்தார், செம்பிறாவிளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். என்பவரின் மகன் அபிசோன் (23) பொறியியல் படித்துள்ள இவர் அழகியமண்டபத்தில் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று மாலை திருவட்டாரிலிருந்து அழகியமண்டபம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக மாடு ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்துள்ளது. இதில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் அப்பகுதியிலுள்ள புளியமரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அபிசோன் படுகாயமடைந்தார்.
உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு ஆற்றூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது மாடு மீது பைக் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூகவலை தளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
"தமிழகத்தில் 3-வது அணி அமைவதை விரும்பவில்லை" - கே.எஸ்.அழகிரி
சேலம்: பள்ளி சென்ற மாணவருக்கு கொரோனா!
காணாமல்போன புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் சடலமாக மீட்பு!
2-ம் கட்டத்தின்போது பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாய்ப்பு
அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு!
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி