உளுந்தூர்பேட்டையில் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை உளுந்தூர் காலனியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் மணிகண்டன் (27). இவர், உளுந்தூர்பேட்டையில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தார். இந்த நிலையில் வழக்கம்போல் நண்பர்களோடு சென்று இரவு நேரத்தில் வீட்டுக்கு வரும் மணிகண்டன் நேற்று மாலை வீட்டிலிருந்து சென்ற பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் மணிகண்டன் இன்று காலை உளுந்தூர்பேட்டை சென்னை சாலையில் உள்ள உளுந்தூர் பெரிய ஏரியில் உடலில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மணிகண்டனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அங்கு வந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மணிகண்டனின் உடலை பார்த்து கதறி அழுதனர். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் போலீசார், மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டன் எதற்காக அடித்தும் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். அவரை யார் கொலை செய்தார்கள் என அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் இருசக்கர வாகனம் உளுந்தூர்பேட்டை சென்னை சாலையில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?