[X] Close >

திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள்? - தமிழக தேர்தல்களம் குறித்து ராகுல் இன்று ஆலோசனை

Rahul-Gandhi-will-hold-a-consultation-on-the-Tamil-Nadu-constituency-today

தமிழக தேர்தல்களம் குறித்து ராகுல்காந்தி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.


Advertisement

தமிழகத்தில் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. ஏற்கெனவே ஆளும் அதிமுக அரசு பாஜகவுடனான கூட்டணியை அறிவித்துவிட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகம் வந்து சென்றுவிட்டார். அவரது வருகை அரசு ரீதியாலானது என சொல்லப்பட்டாலும், காட்சிகள் அரங்கேறியது எல்லாம் 2021 சட்டமன்ற தேர்தலை குறிவைத்துதான் எனக் காட்டியது. இந்நிலையில் எதிர்தரப்பான திமுக-காங்கிரஸும் களத்தில் வேகம் காட்டத்தொடங்கியுள்ளன. அதன்படி, தமிழக தேர்தல்களம் குறித்து ராகுல்காந்தி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

image


Advertisement

காணொளிக்காட்சி முறையில் இன்று நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்னதாக பேசிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ், சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளுக்காக திமுகவிடம் பேரம் பேச மாட்டோம் என தெரிவித்தார். மேலும் எதார்த்தத்தின் அடிப்படையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும். எதார்த்த அணுகுமுறையின்படி நேர்மையாக வெளிப்படையாக பேச்சு நடத்தப்படும். பேச்சுவார்த்தை நடத்தி தோழமைக் கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு காங்கிரஸ் உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close