சென்னையில் வீட்டில் வேலை செய்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக மருத்துவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரம் அடுத்த சி.டி.ஓ. காலனியை சேர்ந்தவர் மருத்துவர் தீபக். இவரது வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண், கடந்த மாதம் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், அப்பெண் வெள்ளிப் பொருட்களை திருடிவிட்டதாக, தாம்பரம் காவல் நிலையத்தில் மருத்துவர் தீபக் புகார் அளித்தார். அதன் பேரில் இளம்பெண்ணிடம் விசாரித்தபோது, மருத்துவர் தீபக் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் வேலைக்கு செல்வதை தவிர்த்ததாகக் கூறியுள்ளார்.
சம்பள பாக்கியை வாங்க சென்றபோது, தீபக்கும், அவரது உறவினர் ஆனந்த் அமிர்தராஜ் என்பவரும் தம்மை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தீபக்கையும் ஆனந்த் அமிர்தராஜையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு