சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த அணிகளில் கோலி தலைமையிலான இந்திய அணியும் ஒன்று. தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் 374 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது போட்டியில் 389 ரன்களை குவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு முறை அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது ஆஸ்திரேலியா.
இதுவரை இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் ஆட்டங்களில் தென்னாப்பிரிக்க அணி மும்பை வான்கடே மைதானத்தில் 2015-இல் நடைபெற்ற போட்டியில் 438 ரன்களை குவித்துள்ளது. அடுத்ததாக இலங்கை அணி ராஜ்கோட்டில் 2009 இல் நடைபெற்ற போட்டியில் 411 ரன்களை குவித்துள்ளது. அதற்கடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா 389 மற்றும் 374 ரன்களை இப்போது குவித்துள்ளது. இங்கிலாந்து அணி கட்டாக்கில் 2017 இல் 366 ரன்களை குவித்திருந்தது.
Innings Break!
Australia have posted a mammoth total of 389/4 on the board.
Scorecard - https://t.co/fkh0ST0JTx #ASUvIND pic.twitter.com/GL1VHIv8Gw — BCCI (@BCCI) November 29, 2020
இதில் இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இந்தியா வென்றிருந்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் 389 ரன்களை சேஸ் செய்தால் மீண்டும் அந்த மேஜிக் நடக்கலாம்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்