[X] Close >

தாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன்

Mother-gift-of-love-Actor-Silambarasan-happy

சிலம்பரசனின் தாயார் உஷா ராஜேந்தர் சிலம்பரசனுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.


Advertisement

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது சிலம்பரசன் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.

image


Advertisement

‘மாநாடு’ படத்தின் போஸ்டர்களும் அண்மையில் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிலம்பரசன் பார்முக்கு வந்து விட்டார் என அவரது ரசிகர்கள் கூறி வரும் இந்தச்சூழலில் சிலம்பரசனின் தாயார் உஷா ராஜேந்தர் அவருக்கு பச்சை நிறத்தாலான மினி கூப்பர் காரை ஒன்றை பரிசளித்துள்ளார்.

நீண்ட நாட்களாக இந்தக் காரின் மீது சிலம்பரசன் விருப்பம் கொண்டிருந்ததாகவும், அந்த ஆசையை தற்போது சிலம்பரசனின் தாயார் நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தனது தாயின் பரிசை பெற்றுக்கொண்ட நடிகர் சிலம்பரசன் தற்போது தனது புதிய காரில் உலா வந்துக் கொண்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close