இந்தியா-ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய இளைஞரும் ஆஸ்திரேலிய இளம்பெண்ணும் தங்களது காதலை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. அதில் நேற்று முன்தினம் நடைபெற்று முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2-ஆவது போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்களை எடுத்தது. அந்த அணியில் டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மார்னஸ் லபுஷானே மற்றும் கிளென் மேக்ஸ்வெல் என நால்வரும் அரை சதமடித்தனர். ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
இதையடுத்து 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. 30 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதனிடையே இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய பெண் ஒருவரிடம், ஸ்டேடியத்திற்குள் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் ஓகே சொல்லியுள்ளார். இதையடுத்து கிரிக்கெட் ஆரவாரத்துடன்,அந்த காதல் ஜோடி கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதற்கு ‘ஆட்டத்தை வேண்டுமானால் ஆஸ்திரேலியா கைப்பற்றலாம். ஆனால் ஆஸ்திரேலிய பெண்ணை நான் தான் கைப்பற்றுவேன் என்ற குறிக்கோளோடு இவர், ஸ்டேடியத்திற்குள் சென்றிருப்பார் போலும்‘ என சமூக வலைத்தளங்களில் பலரும் நகைச்சுவையாக கலாய்த்து வருகின்றனர்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்