இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி 389 ரன்களை குவித்தது.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் - டேவிட் வார்னர் ஜோடி கடந்தப் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடியது. முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதமடித்தனர். கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.
ஒருவழியாக 23 ஆவது ஓவரில் முகமது சமி பந்துவீச்சில் ஆரோன் பின்ச் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டேவிட் வார்னரும் 77 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்ரேயாஸ் ஐயரின் துல்லியமான பீல்டிங்கால் ரன் அவுட்டாகி வெளியேறினார். டேவிட் வார்னர் தன்னுடைய இன்னிங்ஸில் 3 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளையும் விளாசினர். கடந்தப் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் அதிரடிகாட்டினார் ஸ்டீவ் ஸ்மித்.
இந்திய பந்துவீச்சை சிதறடித்த அவர் 62 பந்துகளில் சதம் அடித்தார். பின்பு 104 ரன்கள் சேர்த்திருந்தபோது பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தன்னுடைய இன்னிங்ஸில் 14 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை விளாதி தள்ளினார் ஸ்டீவ் ஸ்மித். இத்துடன் ரன் வேட்டை குறையும் என நினைத்தால் மறுமுனையில் லபுஷானேவுடன் இணைந்த மேக்ஸ்வெல் வழக்கம்போல தன்னுடைய அதிரடி காட்டினார். இருவரும் அரை சதம் அடித்த பின்பும் தங்களது அதிரடியை தொடர்ந்தனர்.
ஆனால் 49 ஆவது ஓவரில் லபுஷானே 61 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி பந்து வரை அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 63 ரன்களை எடுத்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்தது.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?