மேலூர் அருகே, விவசாயம் செழிக்க வேண்டி கண்மாய் மண்ணை குவித்து மக்கள் விநோத வழிபாட்டில் ஈடுபட்டனர்
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த நரசிங்கம்பட்டி பகுதியில் பெருமாள்மலை உள்ளது. அதன் அடிவாரத்தில் மலைச்சாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருநாள் அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதற்காக மேலூர், நரசிங்கம்பட்டி, வெள்ளலூர், சிட்டம்பட்டி, கிடாரிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் காலை முதலே மலையின் அடிவாரத்தில் உள்ள சேங்கை கண்மாயில் இருந்து, கைகளால் மண்ணை அள்ளி அருகில் குவித்து கிடக்கும் மண்குவியலில் 3 முறை கொட்டி வலம் வருகின்றனர்.
இதனுடன் உப்பு மற்றும் மிளகை கொட்டியும் வழிபாடு நடத்துகின்றனர், மேலும் இந்த சேங்கை கண்மாயின் நீரை எடுத்துச் சென்று விளை நிலங்களில் தெளிப்பதால், தங்களது வேண்டுதல் நிறைவேறுவதுடன், தங்களுடைய விளை நிலத்தில் விவசாயம் செழிக்கும் என்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் இவ்வாறு செய்வதால் மழைநீரை சேகரிக்க தூர்வார வேண்டியதில் அவசியம் குறித்து முன்னோர்களால் வகுக்கப்பட்டதை தாங்கள் கடைபிடிப்பதாக கிராமத்தினர் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
Loading More post
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் - மோசடி செய்து முதல் பரிசு பெற்றது அம்பலம்?
“14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” - நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!