ஷார்ட்டர் பார்மெட் கிரிக்கெட்டில் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு தோனி மாதிரியான ஒரு வீரர் தேவை என சொல்லியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங்.
ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும் போது தோனி மாதிரியான வீரர் பேட்டிங் லைனில் அவசியம் இருக்க வேண்டும் என சொல்லியுள்ளார் ஹோல்டிங்.
“இந்திய அணியில் நன்றாக பேட் செய்யக் கூடிய வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் தோனி அணியில் இல்லாததால் கோலியின் அணி தடுமாறி வருகிறது. இது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். தோனி இன்னிங்ஸின் நடுவே வந்து சேஸிங் ஒற்றையாளாக கண்ட்ரோல் செய்வார். அவர் அணியில் இருந்த போது பெரிய ஸ்கோரை இந்திய அணி எளிதாக சேஸ் செய்துள்ளது. டாஸை இழந்தாலும், வென்றாலும் தோனியின் திறனை நம்பி பெரும்பாலும் சேஸிங் தான் இந்தியாவின் ஃபேவரைட்டாக இருந்தது.
பந்தை ஹிட் செய்யும் வல்லமை படைத்த பேட்ஸ்மேன்கள் அணியில் இருந்தாலும் தோனி மாதிரியான ஒரு வீரர் இந்தியாவுக்கு அவசியம் தேவை. அதற்கு காரணம் அவரது திறன் மட்டுமல்ல கேரக்டரும் தான். அவர் ஒரு ஸ்பெஷலான வீரர்” என தனது யூடியூப் சேனலில் சொல்லியுள்ளார் ஹோல்டிங்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்