பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதனை அவர்கள் இருவரும் உறுதி செய்திருந்தனர். அன்று முதல் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் அனுஷ்கா.
இந்நிலையில் தற்போது விளம்பர படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். “செட்டில் இருப்பது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. ஷூட்டின் போது ரொம்பவே அனுபவித்து நடிக்கிறேன். அடுத்த சில நாட்களுக்கு இந்த பணி தொடரும். இந்த ஆண்டு சினிமா துறைக்கு மோசமான ஆண்டாக அமைந்திருந்தாலும் இப்போதாவது களத்திற்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி தான்.
அசாதாரணமான சூழலில் ஷூட் செய்வதால் செட்டில் உள்ள அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு பயோ பபுளில் இருக்கிறோம். சில நாட்களுக்கு ஒருமுறை என பரிசோதனைகள் தொடர்கிறது.
குழந்தை பிறந்த உடன் சினிமா ஷூட்டிங்கிற்கு திரும்புவேன். குழந்தை, குடும்பம் மற்றும் எந்த தொழிலை பேலன்ஸ் செய்வதற்கான யோசனைகளை வைத்துள்ளேன். அதன்படி அதை செய்வேன். நடிப்பதில் எனக்கு திருப்தி கிடைப்பதால் வாழ்நாள் முழுக்க அதை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார் அனுஷ்கா ஷர்மா.
நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்