[X] Close >

“வாழ்நாள் முழுக்க நடிப்பதை தொடர விரும்புகிறேன்” - அனுஷ்கா ஷர்மா

Anushka-Sharma-wife-of-Virat-Kohli-says-that-She-want-to-do-it-for-the-rest-of-her-life-because-she-loves-acting

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதனை அவர்கள் இருவரும் உறுதி செய்திருந்தனர். அன்று முதல் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் அனுஷ்கா.


Advertisement

image

இந்நிலையில் தற்போது விளம்பர படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். “செட்டில் இருப்பது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. ஷூட்டின் போது ரொம்பவே அனுபவித்து நடிக்கிறேன். அடுத்த சில நாட்களுக்கு இந்த பணி தொடரும். இந்த ஆண்டு சினிமா துறைக்கு மோசமான ஆண்டாக அமைந்திருந்தாலும் இப்போதாவது களத்திற்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி தான். 


Advertisement

அசாதாரணமான சூழலில் ஷூட் செய்வதால் செட்டில் உள்ள அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு பயோ பபுளில் இருக்கிறோம். சில நாட்களுக்கு ஒருமுறை என பரிசோதனைகள் தொடர்கிறது. 

image

குழந்தை பிறந்த உடன் சினிமா ஷூட்டிங்கிற்கு திரும்புவேன். குழந்தை, குடும்பம் மற்றும் எந்த தொழிலை பேலன்ஸ் செய்வதற்கான யோசனைகளை வைத்துள்ளேன். அதன்படி அதை செய்வேன். நடிப்பதில் எனக்கு திருப்தி கிடைப்பதால் வாழ்நாள் முழுக்க அதை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார் அனுஷ்கா ஷர்மா. 


Advertisement

நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close