அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா மீது மின்னஞ்சலில் புகார்கள் வந்துள்ளதாக விசாரணை ஆணையத்தலைவர் கலையரசன் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.
சூரப்பா விவகாரத்தில் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தலைவர் கலையரசன்(ஓய்வு பெற்ற நீதிபதி), கடந்த 23 ஆம் தேதி ராஜா அண்ணாமலை மன்றத்தில் இருக்கக்கூடிய அவருடைய கமிட்டி அலுவலகத்தில், இந்த குழுவில் புதிதாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சங்கீதா, பொன்னி ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் நீண்ட ஆலோசனை நடத்தினார். அப்போது சூரப்பா மீது புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கலாம் என ஒரு மின்னஞ்சல் கொடுக்கப்பட்டது.
அதேபோல் விசாரணை ஆணையத்திற்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சற்று முன்பு விசாரணை ஆணையத்தலைவர் கலையரசன் புதிய தலைமுறையிடம் பேசினார். அப்போது, அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா மீது மின்னஞ்சலில் புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், மின்னஞ்சலில் வந்துள்ள புகார்கள் குறித்து நாளை ஆய்வு செய்யப்படும் எனவும் மின்னஞ்சலில் வந்துள்ள புகார்கள் உண்மையாக, ஆதாரங்களுடன் இருந்தால் சூரப்பாவிடம் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்