நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நிவர் புயலானது நேற்று(26.11.2020) அதிகாலை புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரையை கடந்தது. புயல் கரையை தொடுவதற்கு முன்பு இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களின் பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. புயலின் போது காற்றும் 120 முதல் 140 கிமீ வேகத்தில் வீசியது. இதனால், புயல் மற்றும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மீட்பு பணிகளை முழுவீச்சில் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை - 27.11.2020 pic.twitter.com/ntGzi1dna5
இந்நிலையில், நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பயிர்க் காப்பீடு திட்டத்தில் பதிவுசெய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பெற்றுத் தரவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். நிவர் புயலின் போது 61 மாடுகள், 5 எருதுகள், 65 கன்றுகள், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!